இந்தி திணிப்பு - கோவையில் திமுக நிர்வாகி வீடுகளில் கோலம்.!
dmk party draw kolam for against hindi
தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்க கூடாது என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் படி நேற்று இந்தி மொழியை அழித்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலம் போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாநகர், மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் கோலமிட்டனர்.
அதில், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர். அதில் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். இந்தி மொழியை திணிக்காதே. தமிழ் வாழ்க என்று எழுதப்பட்டிருந்தது.
இதேபோல், அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பகுதி செயலாளர் நாகராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, வட்டச் செயலாளர் ஜெபமாலை தாஸ், சந்திரசேகர் மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
English Summary
dmk party draw kolam for against hindi