கனிமவள கொள்ளை!!! யாருக்கு எவ்வளவு லஞ்சம்!!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில்  ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் ,கடந்த ஜனவரி 28 ல் சட்ட விரோதமாகக் கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தமாக 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக சாத்தூர் வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

கலெக்டர் ஜெயசீலன்  உத்தரவு:

மேலும் கலெக்டர் ஜெயசீலன், கனிமவளக் கொள்ளையைத் தடுக்க தவறியதாக கூறி சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் முத்துக்குரு என்பவரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது எந்தெந்த நபர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய டைரியின் பக்கம் என ஒன்று பரவி வருகிறது.

டைரியில் லஞ்ச விவரம்:

அந்த டைரியில் கிராவல் விற்கப்பட்ட விவரம், அரசு அலுவலர்களுக்கு பணம் லஞ்சமாக வழங்கப்பட்ட விவரம் ,கனரக வாகனங்களுக்கு பணம் வழங்கப்பட்ட விவரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையானது கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் சிறப்பு டி .ஆர் .ஓ தலைமையில் நடந்து வருகிறது. இதுகுறித்து ,வெளிப்படை தன்மையோடு டைரி விவகாரத்தின் உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும் என மக்களின் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mineral theft How much bribe to whom


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->