பரபரப்புக்கு மத்தியில் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக வரும் 26ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறார். இதற்கு முன்னதாக, 26ம் தேதி அன்று சாணக்கியபுரியில் நடைபெறும் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

அதாவது, தற்போதுள்ள வைகை என்ற தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin travel to delhi coming 26


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->