இறுதி கட்ட வாக்குப்பதிவு... ஜனநாயக கடமையை ஆற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டமாக வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்த தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைப்பதால் வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் உத்திரபிரதேசம், கோரக்பூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Yogi Adityanath voting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->