உணவு பகுதியில் இருந்த கரப்பான் பூச்சி - இண்டிகோ நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
cocroach in indigo flight
இண்டிகோ விமானத்தில் தருண் சுக்லா என்ற ஊடகவியலாளர், பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதன் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை பார்த்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், இண்டிகோ விமான நிறுவனத்தை குறித்து மோசமாக விமர்சனம் செய்தனர்.
ஒரு சிலர் இனிவரும் காலங்களில் இண்டிகோ விமானங்களில் பயணம் செய்வதை, முழுவதுமாக தவிர்க்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த பதிவுக்கு இண்டிகோ விமானம் சார்பில் தங்களின் ஊழியர்கள் விமானத்தை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
முழு விமானத்திலும் புகையூட்டம் செய்தும், கிருமி நீக்கம் செய்தும் தூய்மை பணிகளை செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பிரயாண அனுபவத்தையே தாங்கள் தர விரும்புவதாகவும், சுகாதாரத்தின் உயர்ந்த தரத்தினை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை, இந்த நிறுவனம் எதிர்கொள்வது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இண்டிகோ விமானத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, மேஜையில் கரப்பான் பூச்சி ஊறுவதை பயணி ஒருவர் வீடியோவாகவும் பகிர்ந்திருந்தார்.
இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் வேறொரு பயணி, பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற போது கரப்பான் பூச்சி தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
cocroach in indigo flight