வந்தே பாரத் ரயில் உணவில் கிடந்த கரப்பான் பூச்சி - அதிர்ச்சியில் பயணிகள்.!
cocroach in vandhe barath train food
இந்தியாவில் பயணிகளின் வசதிக்காக கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இயக்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. அந்த வகையில், வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விதித் வர்ஷ்னே என்பவர் தனது குடும்பத்தினருடன் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலில் சென்றுள்ளார். அப்போது, ரயிலில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, அதனை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சரையும், அமைச்சகத்தையும் மேற்கோள் கோட்டி, ரயிலில் உணவு விநியோகிக்கும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஐஆர்சிடிசி-யின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இதில் சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
cocroach in vandhe barath train food