கோடா | நீட் பயிற்சி மாணவன் தற்கொலை! தொடரும் சோகம்!
Coda NEET training student committed suicide
ராஜஸ்தான், கோடா பகுதியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மையங்களின் நகரமாக திகழும் ராஜஸ்தானின் கோடா பகுதியில் மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாக உள்ளது.
ஜார்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சா சிங் (வயது 16) இவர் கோடப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்தார்.
ரிச்சாசிங் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரிச்சா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Coda NEET training student committed suicide