தனுசு ராசியில் பிறந்தவர்களா நீங்கள்..? உங்களுக்கு பணம், குணம் எது முக்கியம்..? - Seithipunal
Seithipunal


12 ராசிகளில் 09 வது ராசி தனுசு. ராசியின் அதிபதி குரு பகவான். ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள்அடங்கும். இந்த தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுக கூடியவர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள் இவர்கள்.

அதாவது, தனகாரகரான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் நீங்கள் ஓட மாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும்.  நீங்கள் எப்போதும் நட்புக்கும், குணத்துக்கும் மட்டுமே மரியாதை கொடுப்பீர்கள். 

உங்களை எவ்வளவு பெரிய ஆளாகவும்,செல்வந்தராகவே இருந்தாலும் சிறிய அளவில் கூட உங்களை அவமதித்தால் , அவரை அறவே ஒதுக்குவீர்கள். 

மேலும், 11-ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதி சுக்கிரன். இதனால் நீங்கள் ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு நல்ல லாபம் தரும். அதேப்போல சயன, மோட்ச ஸ்தானமான 12-ஆம் இடத்துக்கு அதிபதி செவ்வாய். இதனால் நீங்கள் மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். இதனால், உங்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பீர்கள். இதற்கு நீங்கள் இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். நல்ல மாறுதல்களும் உண்டாகும்.

அப்படி தனுசு ராசியினர் சென்று வர கூடிய தலமே திருப்புட்குழி. அதாவது, திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகரசனுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். 

இங்கு ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு  ஸ்ரீ ராமபிரான் அருள்பாலிக்கிறார். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார், உங்களுக்கு மனா நிம்மதியையும் தருவார்.

திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது.அடுத்து  காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்கு நீங்கள்  செல்லலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Common characteristics of people born in Sagittarius


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->