விமானத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் - சக பயணி மீது சிறுநீர் கழித்த கல்லூரி மாணவர்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே விமானத்தில் பயணிகள் மதுபோதையில் சகபயணிகள் மீது சிறுநீர் கழிக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மற்ற பயணிகளும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்திய விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசபட்டது.

இந்த நிலையில், இன்று அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் ஜேஎஃப்கே விமான நிலையத்திலிருந்து ஏர்லைன்ஸ் விமானம் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு நேற்று வந்தது. இந்த விமானத்தில் டெல்லியில் உள்ள டிபன்ஸ் காலணியைச் சேர்ந்த ஆர்யா வோஹ்ரா என்ற இளைஞர் பயணம் செய்துள்ளார். இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தங்கி படித்து வருகிறார்.

இவர் விமான பயணத்தின் போது அளவிற்கு அதிகமான போதையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தன்னை அறியாமலேயே சிறுநீர் கழித்துள்ளார். இது அருகிலிருந்த சக பயணியின் மீது பட்டுள்ளது. இதையடுத்து இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த மாணவரை விமானத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

அந்த நேரத்தில் அந்த இளைஞர் போதையில் ஒத்துழைப்பு தராமல் அத்துமீறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த மாணவருக்கு அமெரிக்க விமானத்தில் பறக்கத் தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student urinated on co passanger in america airlines flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->