கல்லூரியில் பாதியில் விலகும் மாணவர்களுக்கு  முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் - யுஜிசி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

 ஜே.இ.இ, ஜே.இ.இ மெயின் உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலர் முன்னெச்சரிக்கையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை யுஜிசி பிறப்பித்துள்ளது.

மேலும், சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College Students drop out mid-way must be refunded full fees UGC orders


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->