சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தால் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு புதிய சிக்கல்..!!
Congress decision to question the issue of caste wise census
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து தனது நிலைநாட்டை மறுப்பு அரசியல் செய்யுமாறு பாஜக அரசிடம் காங்கிரஸ் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்த உடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சீனாவுடனான எல்லா பிரச்சனை, பொருளாதார இட ஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்பு அதிகார செயல்பாட்டில் அரசு தலையிடல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினரின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை காங்கிரஸ் வரவேற்றது. ஆனால் பல மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் என வலியுறுத்தியதால் தனது நிலையை காங்கிரஸ் தலைமை மாற்றி உள்ளது. குறிப்பாக பட்டியலினத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் இதர பிற்படுத்த வகுப்பினருக்கான தற்போதைய இட ஒதுக்கீடு பாதிக்காத வகையில் அனைத்து சமுதாயங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக காங்கிரஸ் இருந்ததை நினைவுப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக ஐந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை விரிவாக ஆய்வு செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி பின்னர் அறிவித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் EWS ஒதுக்கீடு குறித்தான விவாதத்தை கட்சி கோரும் என்றும், இந்த பிரச்சனையை பரிசீலனை செய்யுமாறு பாஜக அரசை வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பேசி அவர் "நாங்கள் EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் அனைத்து சமுதாயங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எழுந்த பல்வேறு கேள்விகளால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக மௌனம் காப்பது ஏன்? எனவே இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்" என ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து சாதிப்பிரிவுகளில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கோரும் என்பதால் EWS இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை உருவாக கூடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
English Summary
Congress decision to question the issue of caste wise census