தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்! மயங்கி கீழே விழுந்த காங்கிரஸ் எம்.பி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்பி ஆன பூலோ தேவி நீதம் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கூறி எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகள் இதுவரை இல்லாத அளவில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது குளறுபடிகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தேர்வு விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்துள்ளனர். நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிகள் வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காங்கிரஸ் எம்பி ஆன பூலோ தேவி நீதம் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP fainted in Parliament


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->