இந்தியாவை உலுக்கிய கலவரம்.. 40 பேர் வரை சுட்டு கொலை.. குடியரசு தலைவரை சந்தித்த காங்கிரஸ்.!!
Congress party met the President regarding the Manipur riots
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் நீண்ட நாட்களாக பழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.
இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலானது மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதன் காரணமாக ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்துக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது.
இது குறித்து மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பேசியதாவது "பல்வேறு கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள் எம்-16 மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகள் மூலம் பொதுமக்களை சுட்டனர். அங்கு ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பான மனுவை அளித்துள்ளனர். மணிப்பூர் மாநிலம் கலவரம் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பாததால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.
English Summary
Congress party met the President regarding the Manipur riots