#BREAKING | கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தி, பதிலளிக்காமல் விருட்டென கோபத்தில் கிளம்பிய ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


தன்னை தகுதி நீக்கம் செய்தது குறித்து சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, அதானி விவகாரத்தில் என்னுடைய கேள்விகளை எதிர்கொள்ளாமல், என்னை முடக்க பாஜக முயற்சி செய்வதாகவும், இது மோசமான செயல் என்றும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி இடம், 'மோடி குடும்பப்பெயர்' வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம், "பத்திரிக்கையாளர் போல் நடிக்க வேண்டாம்... (கியூன் ஹவா நிகல் கயீ?-Kyun hawa nikal gayi?) என்று ராகுல் காந்தி பதிலளித்தார். மேலும் அந்த வழக்கு குறித்து எந்த கேள்விக்கும் ராகுல்காந்தி பதிலளிக்கவில்லை.

பின்னர் இறுதியாக, "நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதே எனது பணி, அதாவது நாட்டின் நிறுவனங்களைப் பாதுகாப்பது, நாட்டின் ஏழை மக்களின் குரலைப் பாதுகாப்பது, பிரதமருடனான உறவைப் பயன்படுத்திக் கொள்ளும் அதானி போன்றவர்கள் பற்றிய உண்மையை மக்களுக்குச் சொல்வது.

என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், என் பணியை செய்து கொண்டே இருப்பேன். நான் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்" என்று கூறிவிட்டு கடும் கோபத்துடன் செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தியவிட்டு கிளம்பி சென்றார் ராகுல்காந்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Rahul Gandhi Disqualification as MP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->