தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி திட்டம்! - Seithipunal
Seithipunal


15 இளைஞர்களை கொண்ட குழு மூலம் திட்டத்தை நிறைவேற்ற சதி! 

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது மத்திய அரசு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பைச் சேர்ந்த நிர்வாக அலுவலகங்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறையில் சோதனை செய்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் நடத்தப்பட்டு 356 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையின் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தென்னிந்தியாவை சேர்ந்த 15 இளைஞர்களை வைத்து இந்தியாவில் பயங்கரவாத செயலை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீதிபதிகள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி.

வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி திட்டம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருகின்ற வெளிநாட்டினர் குறிப்பாக யூதர்கள் மீது தாக்குதல் நடத்தவும், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை தாக்குவதற்கும் சதி திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் நேற்று அதன் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conspiracy plan to attack foreigners coming to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->