"ரிமோட்" வாக்குப்பதிவு குறித்து இன்று செயல்முறை விளக்கம்...!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்கு செலுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்கு பதிவு முறையை கொண்டு வர உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதற்கான செயல் விளக்கம்  இன்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் டெல்லி தேர்தல் ஆணைய தலைமையகத்தில் இன்று நடைபெறும் ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 57 மாநில கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இன்று நடைபெறும் செயல் விளக்க கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Consultation meeting on remote voting system in Delhi today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->