திமுக ஆளும் தமிழகத்தில் அதானி குழுமம் முதலீடு - பாஜக பகீர் தகவல்!
Adani group investment in dmk ruled tamil nadu bjp information
தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, தொழில் துறையில் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகள் செய்துள்ளதாக தெரிவித்த அவர், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் பூபேஷ் பாகல் மற்றும் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியின் போது ரூ.25 ஆயிரம் கோடி மற்றும் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆளும் தமிழகத்திலும் அதானி குழுமம் முதலீடு செய்துள்ளதாகவும், சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளதாக கூறினார். அதானி ஊழல் என்றால், காங்கிரஸ் அரசு ஏன் அவரது நிறுவனத்திடம் முதலீடு தேடுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
English Summary
Adani group investment in dmk ruled tamil nadu bjp information