அதிர்ச்சி - கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 10 பேர் கைது.!
ten peoples arrested for drugs sales in coimbatore
கோயம்புத்தூர் மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் அடிக்கடி வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் போதை மாத்திரைகளை விற்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அதனை கோவைக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி அவர் அளித்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலில் உள்ள மதுரை பேரையூரை சேர்ந்த பிரகாஷ், முகமது நவுபல் என்கிற கட்டத்துரை, முஜிப் ரகுமான், ரிஸ்வான் சுகைல், முகமது சபீர், மன்சூர் ரகுமான், சனூப், முஜிபூர் ரகுமான், அனீஸ் ரகுமான், சர்ஜூன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி, 7 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 10 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ten peoples arrested for drugs sales in coimbatore