மீதி இருக்கும் ₹.1 சில்லறையை தர மறுத்த.. கண்டக்டருக்கு ₹.3000 அபராதம்.! - Seithipunal
Seithipunal


2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம். பேருந்துகளில் சில சமயம் பயணச் சீட்டுகளை வாங்கும் போது நடத்துனர்கள் மீதமுள்ள காசை தராமல்  இழுத்தடிக்கும் பழக்கம் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல பேர் அதனை கண்டும் காணாமலும் விட்டு விட்டாலும் சில நபர்கள் தங்களின் உரிமைக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் தங்களுக்கான நீதியை பெரும் செயல்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு வழக்கில் தற்போது பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்த ரமேஷ் என்ற நபருக்கு மீதி இருக்கும் ஒரு ரூபாய் சில்லறையை தர மறுத்திருக்கிறார் நடத்துனர். மேலும், மீதி காசை கேட்ட அவரிடம்  கடிந்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ரமேஷ் தனக்கு 1500 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று  அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்து இருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம். அதன்படி நடத்துனர்  3000 ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் ரமேஷ் வழக்கிற்காக செலவு செய்த தொகை ஆகியவற்றை திருப்பி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கிறது பெங்களூர் நுகர்வு நீதிமன்றம். வழக்கு பதிவு செய்து நான்கு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்தாலும் ரமேஷிற்கு நியாயம் கிடைத்திருக்கிறது என்று மக்கள் இந்த தீர்ப்பை பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

consumer court orders a conductor from bengaluru to pay 3000 rupees as a compensation to a customer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->