சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்தது!
corona covid19 new india OMICRON
உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனாவில் அதி தீவிரமாக புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
மேலும், நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.
புதிய கொரோனா அலை இந்தியாவில் பரவுவதை தடுக்க முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை செய்ய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தடுப்பூசி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு தரப்பில் விரைவி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா இந்தியாவிலும் நுழைந்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குஜராத்ம் மாநிலத்தில் இருவருக்கும், ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
corona covid19 new india OMICRON