இந்தியாவில் பி.எப் 7 வகை கொரோனா வைரஸ்..! சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்..!!
Corona screening is mandatory for international passengers in India
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குஜராத் மாநிலத்தில் இருவருக்கும் ஒரிசா மாநிலத்தில் ஒருவருக்கும் பி.எப் 7 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் பி.எப் 7 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
Corona screening is mandatory for international passengers in India