இனி தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்., அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு.! கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசி போன் போட்டுக்கொண்ட சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே, அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை பஞ்சாப் மாநில அரசு விதித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அரசு ஊழியர்கள் அனைவரும் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி சேர்த்திருக்க வேண்டும்.

அப்படி தடுப்பூசி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கூட, குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி ஆவது செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இதுகுறித்த சான்றிதழ்களை பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அப்படி அரசு ஊழியர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று, பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹரியானா மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு உணவகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து போன்ற இடங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine must in Punjab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->