கொரோனா தடுப்பூசிக்கான காலாவதி நாள்.. மத்திய அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கொரோனா தடுப்பூசிக்கான காலாவதி நாட்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி உற்பத்தி செய்த நாளிலிருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது. 

அதன்படி, கோவேக்சினுக்கு 12 மாதங்கள், கோவிஷீல்டுக்கு 9 மாதங்கள், ஜைகோவ்-டி 6 மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து மேல் கூறப்பட்ட மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால், அந்த தடுப்பூசிகள் கொரோனாவில் இருந்து எத்தனை மாதங்கள் நம்மை பாதுகாக்கும் என இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 

மேலும், பூஸ்டர் தடுப்பூசி எந்த அளவிற்குப் பலன் கிடைக்கும் என்பது தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆதாரங்களை தொழில்நுட்ப நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கான முடிவு வெகு விரைவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccines expiry date


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->