பாலியல் வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவருடைய ஆபாச வீடியோக்கள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பித்துச் சென்றார்.

இதற்கிடையே பிரஜ்வலை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் அவர் கடந்த 31ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அறிவித்தார். அதன் படி பிரஜ்வல் கடந்த 31ம் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த காவல் முடிந்தவுடன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட ரேவண்ணாவுக்கு மேலும் 4 நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் படி பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை மீண்டும் 14 நாட்கள் அதாவது வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court custody extend to prajwal revanna for harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->