ப்ரஜ்வால் ரேவண்ணா விவகாரம் - நீதிமன்றம் புதிய உத்தரவு !
Court Order On Prajwal Revanna Issue
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம். பி. யாக இருந்தவர் ப்ரஜ்வால் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பல பெண்களுடன் இருப்பது போன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கிட்டத்தட்ட 3000 வீடியோக்கள், ப்ரஜ்வால் பல பெண்களுடன் இருப்பது போன்று வெளியானது. மேலும் ப்ரஜ்வால் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெர்மனி தப்பியோடிய ப்ரஜ்வால், கடந்த மே 31ம் தேதி அதிகாலையில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப்ரஜ்வால் அன்று பிற்பகல் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார் .
அங்கு அவருக்கு ஜூன் 6ம் தேதி வரை விசாரணைக்குழுவின் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.
இதையடுத்து ப்ரஜ்வாலின் விசாரணைக் குழு காவலை ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக நடந்து முடிந்த மக்களைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட ப்ரஜ்வால் ரேவண்ணா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Court Order On Prajwal Revanna Issue