ஜனவரி திறப்பு..ஜூன் விரிசல்! பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


மும்பை : கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த மும்பை அடல் சேது பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பை மற்றும் அருகே உள்ள நவிமும்பை நகரில் 22 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டது. நாட்டின் மிக நீளமான கடல் வழி பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கட்டுமான பணிகள் நேரமடைந்ததாக தகவல்கள் வெளியானது.

ரூ. 17,843 கோடி செலவில் உருவான மிகப் பிரம்மாண்ட அடல் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்து ஜனவரி 12ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த மும்பை அடல் சேது பாலத்தில் விரிசல் மற்றும் பிளவுகள் உண்டாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cracks in Atal Setu Bridge inaugurated by Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->