தயிர் பாக்கெட்டில் இந்தி தேவையில்லை.. உத்தரவை திரும்பப்பெற்ற மத்திய அரசு!
Curd pocket hindhi issue Central govt reverse
தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
தயிர் பாக்கெட்டுகளில் 'தயிர்' என்ற சொல்லுக்கு பதிலாக ஹிந்தியில் தாஹி சொல்லை பயன்படுத்துமாறு, இந்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து பல அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தாஹி என அச்சிட வலியுறுத்திய அறிவிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் FSSAI வாபஸ் பெற்றது.
English Summary
Curd pocket hindhi issue Central govt reverse