சங்கிலியை அறுத்துகொண்டு தசரா யானைகள் மோதல்!...மைசூருவில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மைசூரு தசரா விழா வரும் அக்டோபர் மாதம்  3-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. மேலும் விழா முடிவடையும் 12-ம் தேதி தசரா ஊர்வலம்  நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக 14 யானைகள் மைசூருக்கு வந்துள்ளன.

மேலும் இந்த யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தனஞ்செயா யானை, திடீரென்று சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கஞ்சன் யானையை தாக்கியது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த கஞ்சன் யானை, திடீரென்று சங்கிலியை அறுத்துக்கொண்டு பிளிறி அரண்மனை வளாகத்தில் இருந்து ஓடியது. தொடர்ந்து அதனை துரத்திக் கொண்டு தனஞ்செயா யானையும் ஓடியது.

பின்னர் நடுரோட்டிற்கு சென்ற கஞ்சன் யானை பொது மக்கள் கூட்டம்  மற்றும் வாகன போக்குவரத்தை கண்டு அமைதியாக நின்றது. தொடர்ந்து பாகன்கள்  கஞ்சன் யானை மற்றும் தனஞ்செயா யானையை ஆசுவாசப்படுத்தி  அரண்மனை வளாகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

யானைகள் மோதல் தொடர்பான வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dasara elephants clash by cutting the chain Great commotion in Mysuru


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->