திருப்பதியில் தேதி நேரத்துடன் கூடிய டோக்கன் - எப்போதிலிருந்து ஆரம்பம்?.
date and time token sales in tirupathi
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகமாக இருக்கும். கூட்டம் அதிகரிப்பால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் தெரிவித்து இருப்பதாவது:-

"திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். 19-ந்தேதியில் இருந்து பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு முன்பு போலவே எந்த நாளுக்கு தரிசன டோக்கன் வேண்டுமோ அந்த நாளிலேயே தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
பக்தர்கள் இந்த டோக்கன்களை அலிபிரி அருகில் உள்ள பூதேவி வளாகத்திலும், ரெயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாசத்திலும், பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசத்திலும் பெற்றுக்கொள்ளலாம்" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
date and time token sales in tirupathi