ஆம்புலன்ஸ் மோதி பயணிகள் காத்திருப்பு அறை இடிந்து விபத்து..! தாய்-மகள் பலி...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் பயணிகள் காத்திருப்பு அறை இடிந்து விழுந்ததில் தாய்-மகள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் பகுதியை சேர்ந்தவர் ரூபி(35). இவர் தனது இரண்டரை வயது குழந்தை குஷ்பூ மற்றும் சகோதரியுடன்​ ​அம்ரித்பூர் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது வெயில் காரணமாக ஹனுமான் ஷிவ் மந்திர் அருகே உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் தனது மகள் மற்றும் சகோதரியுடன் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது ராஜேபூரில் இருந்து அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் காத்திருப்பு கூடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காத்திருப்பு அறை இடிந்து விழுந்ததில் தாய்-மகள் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் சம்பவ இடத்திலேயே தாய்-மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter mother killed in Waiting room fell due to collision of ambulance in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->