முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் உத்தரப்பிரதேச அவசர சேவைகளுக்கான 112 என்ற உதவி எண்ணின் வட்ஸ் அப் குழுவிற்கு வந்துள்ளது. இதில் சிஎம் யோகி ஆதித்யநாத்தை விரைவில் கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாக, போலீசார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து இது தொடர்பாக, சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல்துறையினர் ஐபிசி பிரிவு 506 மற்றும் 507 மற்றும் 66 ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரிஹான் என அழைப்பாளர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தற்போது கேரளா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death threat to uttar pradesh Chief Minister Yogi Adityanath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->