ஆந்திராவில் உயரும் பலி எண்ணிக்கை : கனமழையால் இதுவரை 19 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் சில பகுதிகளில் படகு மூலம் சென்றும் ஆய்வு செய்தார். 

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழையால் 136 கால்நடைகள் இறந்துள்ளதாகவும், 1,721542 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 176 நிவாரண முகாம்களில் 41,927 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அம்மாநில  அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rising in Andhra Pradesh 19 people have died due to heavy rains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->