சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க முடிவு! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் பாக்கியராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் பாண்டே என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவருக்கு ரத்த அணுக்களை அதிகரிக்க ட்ரிப்ஸ் மூலம் ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்டது. அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இந்த நிலையில் நோயாளிக்கு ட்ரிப்ஸ் மூலம் ரத்த பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் பிரதீப் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் என தெரிய வந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக அந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக பாக்யராஜ் நகர மேம்பாட்டு ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 28ம் தேதிக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களின் வீட்டை இடிக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத். தற்பொழுது தவறு செய்த மருத்துவமனையையும் இடிக்க உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

decision to demolish the hospital in UP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->