தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை! அதிகாரபூர்வ அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடுவது வழக்கம். தற்போது புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30, 31-ந்தேதி தீபாவளி, மறுநாள் நவ.1 வெள்ளி விடுமுறை, நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 விடுமுறை அறிவித்துள்ளதால், சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

புதுவையை போலவே தமிழகத்திலும் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepavali Puducherry leave extern


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->