அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா தேர்தலின் போது கடந்த 2018 ஆம் ஆண்டு, காங்கிரஸ் எம்.பி ஆன ராகுல் காந்தி பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சித்ததாக பா.ஜனதாவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்ந்தார். 

மேலும் அந்தப் புகாரில், ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த கருத்தை ராகுல் காந்தி தெரிவித்த போது அமித்ஷா பா. ஜனதா தலைவராக இருந்தார். இதற்கிடையே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகவில்லை. 

இந்நிலையில் இன்று காலை ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தர பிரதேசம், சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. 

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். மேலும் அவர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation case Court granted bail to Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->