அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பெங்களூருவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ராகுல் காந்தி பா.ஜ.கவின் அப்போதைய தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது பா.ஜ.க தலைவர் விஜய் மிஸ்ரா அவதூர் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு உத்தர பிரதேசம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த வழக்கில் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation Case Special Court Summons Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->