2-வது நாளாக தொடரும் போராட்டம்: 60 விவசாயிகள் காயம்!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் தாக்குதலால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர். 

இதனால் விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்தனர். 

இந்த நடவடிக்கையின் போது விவசாயிகள் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் நவீன வாயு கவசம் போன்றவற்றை அணிந்து விவசாயிகள் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் முன்னேறி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

மேலும் இந்த போராட்டம், சட்டம் இயற்றும் வரை தொடரும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi 2nd day continues Protest 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->