டெல்லி எய்ம்ஸ் சர்வரை முடக்கிய ஹேக்கர்கள்! ரூ.200 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை கேட்பதாக தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஆறாவது நாளாக முழுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை முடக்கிய ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளத. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் செயல் இழந்துள்ளதால் அவசர காலங்களில் நோயாளிகளின் பராமரிப்பு சேவை, வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் ஆய்வு பிரிவில் பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகளின் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

மருத்துவமனை ஊழியர்கள் பழைய நடைமுறைப்படி நோட்டுப் புத்தகங்களில் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை குறித்தான விவரங்களை எழுதி வருகின்றனர்.

எனினும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை மீட்கும் முயற்சியில் கணிப்பொறி வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சர்வர்கள் செயல்படாததால் மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவிலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi AIIMS Server Hackers Demand Cryptocurrency Worth of Rs200 Crores


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->