டெல்லி விமான நிலைய நெரிசல்: கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை எதிர்கொள்ள கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் சமீபத்தில் ஏற்படுகின்ற கூட்ட நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (பிசிஏஎஸ்), குடியேற்றப் பணியகம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் கூடிய உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், விமான நிலையத்தில் விரிவடைந்து வரும் முனையப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் கூடுதலாக 1,400 வீரர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று முனையங்களும், சரக்குகளை வைத்திருக்கும் பகுதியும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றதால் வரும் நாட்களில் பயணிகள் போக்குவரத்து மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi airport to get 1400 more CISF personnel to ease crowding


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->