டெல்லி முதல்வர் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜர்!
Delhi Chief Minister Appear Enforcement Department
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராக அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியது.
அதில், இன்று காலை விசாரணைக்காக 11 மணிக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பா. ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சி எங்களது கட்சியை அழிக்க நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.
கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமில் வழங்காத நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவாலிடம் இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் முதல் முறையாக விசாரணை நடத்த உள்ளனர்.
English Summary
Delhi Chief Minister Appear Enforcement Department