Viral Video: வெப்பத்தை குறைக்க மாட்டு சாணத்தை பூசிய கல்லூரி முதல்வர்! - Seithipunal
Seithipunal


டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் லட்சுமிபாய் கல்லூரியில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக வகுப்பறை சுவர்களில் மாட்டு சாணம் கலந்த கலவை பூசும் செயல்பாடு வைரலாகியுள்ளது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் சேர்ந்து வகுப்பறை சுவர்களில் அந்த கலவையை பூசும் வீடியோ தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த முயற்சி, வெப்பநிலை குறைக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார். ஆசிரியர்களுக்கான குழுவில் பகிர்ந்த செய்தியில், இது சி பிளாக் வகுப்பறைகளில் சோதனையாகப் பார்வையிடப்படுவதாகவும் கூறியிருந்தார்.

வத்சலா மேலும் தெரிவிக்கையில், இது சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் ஒரு முயற்சி எனவும், மாட்டு சாணம் மட்டுமல்லாமல் மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர், முல்தானி மிட்டி ஆகியவற்றும் கலக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், அறைகளில் வெப்பநிலையை கணிக்க அனுகூலமான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் சிலர் இந்த முயற்சியை விமர்சித்துள்ள நிலையில், வத்சலா இது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi College Heat wave issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->