ஜாஃபர் சாதிக்கை 3 நாள் விசாரிக்க ED-க்கு அனுமதி.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் போதை பொருள் கடத்தலில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்ததற்கான சாத்திய கூறுகள் இருப்பதால் திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேரிடம் மூன்று நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. 

இதற்காக சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை சற்று முன்னர் விசாரித்த டெல்லியில் பாட்டியாளர் நீதிமன்றம் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் வரும் மே 8 9 10 ஆகிய தேதிகளில் திகார் சிலைக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துரைக்கு டெல்லி பாட்டியாளர் ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த வாக்கு மூலத்தில் யார் யார் பெயரை ஜாஃபர் சாதி குறிப்பிடுகிறாரோ அவர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவர அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi court permission granted to ed investigate JaffarSadiq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->