டெல்லி தீ விபத்து.. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!
Delhi fire accident Tamil Nadu Chief Minister MK Stalin's condolences
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 27 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன்." என பதிவிட்டுள்ளார்.
English Summary
Delhi fire accident Tamil Nadu Chief Minister MK Stalin's condolences