மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி..! - Seithipunal
Seithipunal


புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் இன்று சந்தித்தனர். 

இதன்போது அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர்.

இது தொடர்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இன்று, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Finance Minister Nirmala Sitharaman and Minister Thangam Thennarasu Kanimozhi MP Meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->