ஆளில்லா கனரக டிரோனை வெற்றிகரமாக சோதனை செய்த ஈரான்! - Seithipunal
Seithipunal


காசா என்ற அதி கனரக ஆளில்லா விமானத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை அறிமுகப்படுத்தியுள்ளது .நேற்று நடந்த பயிற்சியின் போது முதன்முறையாகக் காசா ட்ரோனைப் பயன்படுத்தி எட்டு இலக்குகளை IRGC வான்படை வெற்றிகரமாக அழித்தது

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை, காசா என்ற அதி கனரக ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.நேற்று நடந்த இராணுவப் பயிற்சியின் போது இந்த ஆளில்லா விமானத்தை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கனரக ஆளில்லா விமானம் ,ஷஹீத்-149 காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை  தெரிவித்துள்ளது.மேலும் இந்த கனரக ஆளில்லா விமானம் ,35 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட 'காசா' மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் காசா டிரோனின் பேலோட் திறன் குறைந்தது 500 கிலோகிராம் ஆகும் என்றும் இந்த டிரோனின் 13 மிஸைல் குண்டுகள் வரை செல்ல முடியும் என்றும்  இது 1,000 கிலோமீட்டர் தூரம் மற்றும் 4,000 கிலோமீட்டர் ரேடியஸ் வரை இயங்கும் திறன் உடையது என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று நடந்த பயிற்சியின் போது முதன்முறையாகக் காசா ட்ரோனைப் பயன்படுத்தி எட்டு இலக்குகளை IRGC வான்படை வெற்றிகரமாக அழித்தது என்றும் காசா என்பது கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் குண்டுகளால் துளைக்கப்பட்டு 37,400 பேர் உயிரிழந்த பாலஸ்தீனிய நகரம் ஆகும் எனஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை தெரிவித்துள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran Successfully Tests Unmanned Heavy Drone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->