வார இறுதி ஊரடங்கை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் 3வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இதனிடையே தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்நிலையில், வார இறுதி ஊரடங்கை ரத்து செய்வது தொடர்பான முன்மொழிவை துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு டெல்லி அரசு அனுப்பியது. தினசரி கடைகளை திறக்கவும், 50 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வார இறுதி ஊரடங்கை ரத்து செய்ய முடியாது, அத்தியவசிய மற்ற கடைகள் திறக்க அனுமதிக்க முடியாது என துணைநிலை ஆளுநர் மறுத்துவிட்டார். ஆனால், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் இயங்க அனுமதி அளித்துள்ளார். 

இதுகுறித்து டெல்லி துணை முதலமைச்சர் கூறியதாவது, டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் தொழில் நிறுவனங்கள் நடைபெற அனுமதி அளிப்பது அவசியம் என்றார். ஆனால், துணைநிலை ஆளுநர் தலைமை வகிக்கும் டெல்லி பேரிடர் மேலாண்மை குழு அலுவலர் ஒருவர் கூறுகையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து தான் இருக்கிறது. இது குறையும் வரை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi governor refuses to cancel lockdown


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->