மொத்தம் ரூ.60 கோடி.. விளம்பரத்துக்கு மட்டுமே 52.52 கோடி.! அதிர வைக்கும் டெல்லி அரசு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சி, பல்வேறு நல திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்ச்சியில் செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விசயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில், கோடிக்கணக்கிலான மாணவர்கள் இலவச கல்வியை பெறும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த செயல் திட்டம் பிற மாநில அரசுகளாலும் பின்பற்றப்பட வேண்டும் என்று டெல்லி அரசு வலியுறுத்தி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், ஏழை மக்களும் இலவச சுகாதார நல வசதிகளை பெறுவதற்கு, பல இடங்களில் மொகல்லா கிளினிக்குகள் என்ற பெயரில் சுகாதார மையங்கள்  விரிவுபடுத்தப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம் செயல்படுத்த முடிவாகி, இதற்காக 2021-2022-ம் ஆண்டுக்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த நிதி எந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து உள்மட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில், பல அதிர்ச்சி  தகவல்கள் வெளிவந்துள்ளன. 

அதாவது, மொத்தம் ரூ.60 கோடி நிதி ஒதுக்கியதில், ரூ.56.14 கோடி அளவுக்கே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல பள்ளி கூடங்கள் இந்த நிதியை திருப்பி அளித்துள்ளன. அவ்வாறு, திருப்பி வந்த தொகையின் மதிப்பு ரூ.26 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதில், அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திட்ட விளம்பரத்திற்காக மட்டுமே ரூ.52.52 கோடி அளவுக்கு நிதி செலவிடப்பட்டுள்ளது என்று டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Govt Plan Fund Allocation 60Crs used to Project add cost of Rs52crs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->