டெல்லி மதுபான கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி கைது செய்தனர். 

இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். 

அதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கவிதா டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

கவிதாவின் ஜாமின் மீதான விசாரணை இன்று பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கின் மீதான உத்தரவு வருகின்ற 6 ஆம் தேதி பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi liquor policy case judgment Kavita bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->