பரபரப்பான சூழலில்... தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்.!  - Seithipunal
Seithipunal


நாட்டின் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது. 

மேலும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 18 வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது நீட் தேர்வு முறைகேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றதால் நாடாளுமன்றத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் எம்.பி.க்கள் கூட்டல் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேச உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi NDA MPs meeting started 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->