டெல்லி || துப்பாக்கியை காட்டி காரை கடத்திய கும்பல்.! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தில் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் கண்டோன்மென்ட் பகுதியில் ஆடம்பர ரக கார் ஒன்றை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையர்கள், கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கார் ஒன்று சாலையின் ஓரத்தில் வந்து நின்றது. அந்தக் காருக்கு அருகில் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டி செல்ல முற்பட்டவர்களில் ஒருவர், இந்தக் காரை கண்டதும் சற்று நடந்து செல்கிறார். இந்நிலையில், காரில் இருந்து ஒருவர் கீழே இறங்குகிறார். 

இதை பார்த்த உடனே நடந்து சென்ற அந்த நபர் திரும்பி வந்து, காரில் இருந்து இறங்கிய நபரை நெருங்கி கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். இதையடுத்து, முகமூடி அணிந்த மற்றொரு நபர் காரை திறக்க முயல்கிறார். இதனால், அவர்கள் அருகே நின்றிருந்த மற்றொரு கார் திடீரென அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய நபர் பாதுகாப்பிற்காக அருகே மக்கள் கூடியிருந்த பகுதிக்கு செல்கிறார். ஆனால், மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பர்ஸ், கார் சாவி போன்றவற்றை பறிக்க முயற்சி செய்தனர். மேலும், துப்பாக்கியை கொண்டு அவரை சுட மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். துப்பாக்கியைப் பார்த்த மக்கள் பயந்து ஓடினர்.

அதன் பிறகு, கார் ஓட்டுனரிடம் இருந்து கார் சாவியை மிரட்டி வாங்கி காரை எடுத்துக் கொண்டு அவர்கள் செல்கின்றனர். அதன்பின்னர், சுற்றியிருந்தவர்கள்  பயத்துடன் தங்களது வாகனத்தில் ஏறி புறப்பட்டு செல்கின்றனர். மூன்று பேர் கொண்ட கும்பல், காரை கடத்தி கொண்டு அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi three members robbed car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->